உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்ட திட்டக்குழு பிரதிநிதிகள் பதவியேற்பு விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது
- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
- 18 பேர் திட்டக்குழு உறுப்பினராக பதவியேற்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட திட்டக்குழு பிரதிநிதிகள் பதவியேற்பு விழா வருகிற 28-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. திட்டக்குழு தலைவராக மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவர் சத்தியாபாமா, துணை தலைவராக கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர் 18 பேர் திட்டக்குழு உறுப்பினராக பதவியேற்கின்றனர்.
மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய தலைவர்கள், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கின்றனர்.