வடமாநிலத்தினர் வருைக அதிகரிப்பால் திருப்பூர் தொழில்துறையினர் நிம்மதி
- கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
- உறவினர், நண்பர்கள் சிலர் குடும்பத்தினருடன் ரெயில் நிலையம் வந்திறங்குவதை காண முடிகிறது.
திருப்பூர் :
கடந்த மார்ச் 8-ந் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. திருப்பூரில் பணியாற்றி வந்த வடமாநிலத்தினர் பலர் பண்டிகை கொண் டாட்டங்களுக்கு சொந்த மாநிலம் பயணித்தனர். கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.பண்டிகை முடிந்து 2வாரங்கள் கடந்துள்ள நிலையில், மீண்டும் திருப்பூருக்கு பலரும் வர தொடங்கியுள்ளனர். சென்றவர்கள் மட்டுமின்றி திருப்பூருக்கு பலரை புதிதாக அழைத்தும் வருகின்றனர். உறவினர், நண்பர்கள் சிலர் குடும்பத்தினருடன் ரெயில் நிலையம் வந்திறங்குவதை காண முடிகிறது.
வாரநாட்களை விட வார இறுதி விடுமுறை நாட்களில் திருப்பூரை கடந்து செல்லும் ரப்திசாகர், அரோனி, ஹிம்சாகர், ஸ்வர்ண ஜெயந்தி, எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட், பிலாஸ்பூர், பரூனி, கோர்பா சூப்பர்பாஸ்ட் உள்ளிட்ட ரெயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
திருப்பூரில் அதிகமாக பீகார் மாநிலத்தவர் பணிபுரிகின்றனர்.அம்மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ெரயிலில் பொது பெட்டிகள் நிரம்பி வழியும் அளவு வடமாநிலத்தினர் வந்திறங்குகின்றனர்.இதனால் கடந்த இரு தினங்களாக திருப்பூர் ரெயில் நிலைய பிளாட்பார்ம் வடமாநிலத்தினரால் நிரம்பி வழிகிறது.திருப்பூருக்கு வேலைவாய்ப்பு தேடி வடமாநிலத்தினர் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால் தொழில்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.