உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்ரீசோழாபுரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2022-08-20 10:28 GMT   |   Update On 2022-08-20 10:28 GMT
  • நாளை காலை 6.15மணிக்கு மேல் 7. 45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  • காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை வேள்வி, கணபதி வழிபாடு, ஜப பாராயணம் நடைபெறுகிறது.

திருப்பூர் :

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள மேயர்கோவில் ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர்( ராகு கேது ஸ்தலம்) கோவிலில் நாளை 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15மணிக்கு மேல் 7. 45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை வேள்வி, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், திரவியாஹூதி, வேதிக அர்ச்சனை, மூல மந்திர ஹோமம், ஜப பாராயணம் நடைபெற்றது.

காலை 8. 45 மணிக்கு விசேஷசந்தி, 11 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி ஆரம்பம், விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், திரவியாஹூதி, வேதிக அர்ச்சனை, வேத ஜப பாராயணம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், இரவு 7.30 மணிக்கு தேவி ஸ்ரீயின் பரதநாட்டியம் நிகழ்ச்சி, 8 மணிக்கு திருப்பூர் ரஜினி செந்தில் வழங்கும் கொங்கு புகழ் மேஸ்ட்ரோ இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை 21ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், திரவியாஹூதி, காலை 5.45 மணிக்கு நாடி சந்தானம், காலை 6.45 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, காலை 7 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 7.31 மணிக்கு ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஷ்வரர் பரிவார விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், 7.40 மணிக்கு ஸ்ரீ சோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கு செல்வராஜ் எம். எல்.ஏ., தலைமை தாங்குகிறார். பக்தர்கள் பலர் பங்கேற்கின்றனர். 

Tags:    

Similar News