டென்மார்க்கில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு - திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு
- ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 4.5 சதவீதமாக உள்ளது.
- அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் டென்மார்க் நாட்டில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருப்பூர் :
டென்மார்க் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 4.5 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில் இருந்து ஆண்கள், சிறுவர்களுக்கான டிரவுசர், ஓவரால், ஷார்ட்ஸ், புல்ஓவர், டி-சர்ட், பெண்களுக்கான டிரவுசர், ஜாக்கெட்டுகள் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.
டென்மார்க் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேலும் உயர்த்துவதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தொடர்ந்து முயற்சித்து வருகிறது. வருகிற அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் டென்மார்க் நாட்டில் வர்த்தகர் - ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் இந்திய ஏற்றுமதியாளர் பங்கேற்க ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.டென்மார்க் நாட்டின் இறக்குமதியில் பின்னலாடை ரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்நாட்டில் நடைபெற உள்ள வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 0421 2232634 என்ற எண்ணில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.