வாகன பார்க்கிங் வசதி கேட்டு வியாபாரிகள் மனு
- மீன் மார்க்கெட்டிற்கு வந்து செல்ல அம்மா உணவகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது.
- வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளவும் அனுமதி தர வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்ட த்தின் கீழ் கட்ட ப்பட்டுள்ள தென்னம்பா ளையம் மீன் மார்க்கெட்டிற்கு வந்து செல்ல அம்மா உண வகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது. அதிலும் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆகையால் அந்த ஆக்கிரமி ப்புகளை அகற்றி தருவதோடு குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் இடத்தில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி மற்றொரு வழித்தடத்தை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தற்போது உள்ள தற்காலிக மீன் மார்க்கெ ட்டில் வாடிக்கை யாளர்கள் மற்றும்எங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளவும் அனுமதி தர வேண்டும். அதே போல் எங்களை நம்பி 200க்கும் மேற்பட்டமீன் வெட்டும் தொழிலாளர்கள் அங்கு மீன் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.