உள்ளூர் செய்திகள்

கிராமம்தோறும் மரக்கன்றுகள்-இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-08-27 07:26 GMT   |   Update On 2023-08-27 07:26 GMT
  • 75 உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
  • கிராம ஊராட்சிகளில் உள்ள ரிசர்வ் சைட், பூங்கா உள்ள இடங்களில் கூட இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்

திருப்பூர்,ஆக.27-

நாட்டின் 75வது சுதந்திர தினம் கடந்த ஆண்டு 2021ல் நிறைவு பெற்றது; ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில், மக்களின் கலாசாரம், பண்பாடு, முற்போக்கு சிந்தனை உள்ளிட்டவற்றை பிரசாரமாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல், நீர், கலாசார பெருமை, சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியம் உள்ளடக்கிய மேம்பாடு, ஒற்றுமை ஆகிய கருப்பொருளை முன்வைத்து இந்த இயக்கம் நடத்தப்பட்டது.

கடந்த 2021 மார்ச் 12ல் துவங்கி 75 வார இயக்கமாக நடத்தப்பட்ட இந்த இயக்கம் கடந்த 15ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதன் நினைவாக ஒவ்வொரு ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 75 உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ஊராட்சிகள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்தந்த ஊராட்சிகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர், மரம் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களை இணைத்து மரக்கன்று நடும் திட்டத்தை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் உள்ள ரிசர்வ் சைட், பூங்கா உள்ள இடங்களில் கூட இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News