உள்ளூர் செய்திகள்
உடுமலை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
- கும்ப ஸ்தாபனம், மண்டபார்ச்சனை, யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், முதற்கால பூஜை, ஹோமங்கள் நடைப்பெற்றது.
- காலை 9.30 மணிக்கு மேல் அன்னதானம் , பக்தர்களுக்கு வழங்கபட்டது.
உடுமலை :
உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் சீனிவாசா ஆஞ்சநேய பெருமாள் கோவில் உள்ளது .இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 2 ந் தேதி துவங்கிய நிலையில்காலை 5:45 மணிக்கு மேல் கணபதி பூஜை ,புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம், மண்டபார்ச்சனை, யாகசாலை பிரவேசம் ,வேத பாராயணம், முதற்கால பூஜை, ஹோமங்கள் நடைப்பெற்றது.
கும்பாபி ேஷகத்தையொட்டி காலை 5 மணிக்கு பிரதிஷ்ட ஹோமங்கள், காலை 7.30 மணிக்கு யாத்திரா தானம் ,கடம் புறப்பாடு நடைப்பெற்றது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. காலை 9.30 மணிக்கு மேல் அன்னதானம் , பக்தர்களுக்கு வழங்கபட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைய த்துறையினர் செய்து இருந்தனர்.