சாலை வசதியின்றி தவிக்கும் உடுமலை மலைவாழ் மக்கள்
- கருமுட்டிவரை ரோடு அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- மலைவாழ் கிராம மக்களும், மலையடிவார பகுதியில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளும் பாதிக்கின்றனர்.
உடுமலை :
ஆனைமலைபுலிகள் காப்பகத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரக ங்கள் உள்ளன. வன ப்பகுதியில்உள்ள செட்டில்மெ ண்ட்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.
இவ்வசதிகளை செய்து தருமாறு அவர்கள் வனத்துறையிடமும் தமிழக அரசிடமும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள குழிப்பட்டி, மாவடப்பு, புளிய ம்பட்டி, கருமுட்டிஉட்பட மலைவாழ் கிராமங்களில் இருந்து சமவெளிக்கு வர நேரடி இணைப்பு ரோடு இல்லை.கடந்த சிலஆண்டுகளுக்கு முன்தேவனூர்புதுாரில் இருந்து, மயிலாடும்பாறை வழியாகநல்லார் காலனி வரை ரோடுஅமைக்கப்பட்டது.ஆனால்கருமுட்டிவரை ரோடு அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் கிராம மக்களும், மலையடிவார பகுதியில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளும் பாதிக்கின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், கருமுட்டி திட்ட ரோடு பணிகளை மேற்கொள்ள பலஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த ரோடு அமைக்கப்பட்டால் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பல மலைவாழ் கிராமங்களை இணைக்க முடியும்.இத்திட்ட த்தை செயல்படுத்த வேண்டும் என காண்டூர் கால்வாய் பணிகள் நடக்கும் போதே அப்பகுதியினர்அரசை வலியுறுத்தினர்.பலஆண்டு கால போரா ட்டத்துக்குப்பிறகு நபார்டுதிட்டத்தின் கீழ் வறப்பள்ளம் வரை ரோடு அமைக்கப்பட்டது.வறப்ப ள்ளத்தில் பாலம் அமைத்து மலைவாழ் கிராமம் வரை இத்திட்டத்தை முழுமை ப்படுத்தினால் 300க்கும் அதிகமான தோட்டத்து சாளைகளில் வசிக்கும் மக்களும் மலைவாழ் மக்களும் பயன்பெறுவார்கள்.
மாவடப்பு உட்பட பல செட்டி ல்மெண்ட்களுக்கு உடுமலை பகுதியிலிருந்து செல்ல வசதி இல்லை. அவசர தேவைக்காக கூட பல கி.மீ., தூரம் சுற்றி வரும் நிலை தவிர்க்கப்பட்டு அவர்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பிரச்னையில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.