வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு
- உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.
- தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் இந்த படிவத்தை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்கள் இந்த ஆண்டுக்கான சுய உறுதிமொழி ஆவணத்தை செப்டம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.