உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி. 

பயன்படுத்திய சமையல் எண்ணையை பயோ டீசல் தயாரிக்க வழங்க வேண்டும் - உணவகங்களுக்கு அறிவுறுத்தல்

Published On 2022-09-02 06:59 GMT   |   Update On 2022-09-02 06:59 GMT
  • பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டன.
  • 4 கிலோ கோழி இறைச்சி மற்றும் 10 கிலோ சரியான லேபில் இல்லாத உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

உடுமலை :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், கோடீஸ்வரன், பாலமுருகன், சிரஞ்சீவி, ரகுநாத் ஆகியோர் உடுமலையில் கல்பனா ரோடு, பழனி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் பேக்கரிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்த பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கெட்டுப்போன சாயம் ஏற்றப்பட்ட 4 கிலோ கோழி இறைச்சி மற்றும் 10 கிலோ சரியான லேபில் இல்லாத உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட ஒரு உணவகம் ,இரண்டு பேக்கரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தாமல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு பயோடீசல் தயார் செய்வதற்காக உரிய விலைக்கு வழங்க வேண்டும்.

சமையல் எண்ணெயை, சில்லறை விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. பில் புத்தகத்தில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் எண் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அச்சிட்ட பேப்பரை உணவுகளை மடித்து கொடுக்கும்போது சூடான உணவுப் பொருளில் அதில் உள்ள கெமிக்கல் கலந்து வயிறு தொடர்புடைய பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதே பிளாஸ்டிக் மூலப்பொருள் உருகி மனித உடலில் கலந்து கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளன. எனவே அவற்றை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News