உள்ளூர் செய்திகள் (District)

வள்ளி கும்மியாட்டத்தில் அரங்கேற்றம் செய்தவர்களை படததல் காணலாம்.

காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம்

Published On 2022-07-12 05:52 GMT   |   Update On 2022-07-12 05:52 GMT
  • கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
  • 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

பல்லடம் :

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், கூப்பிடு பிள்ளையார் கலை வள்ளி கும்மி ஆட்டம் குழுவின் 5-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள்,பெண்கள் ஆடிய வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கும்மியாட்ட ஆசிரியர்கள் பெரியசாமி, கலையரசி, முருகன் -வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடி கும்மி ஆட்ட குழுவினரை உற்சாகப்படுத்தினர்.கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி, கூப்பிடு பிள்ளையார் அறக்கட்டளை நிர்வாகி சின்னச்சாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.முன்னதாக 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News