உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு

Published On 2023-08-09 06:37 GMT   |   Update On 2023-08-09 06:37 GMT
  • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் 8 பெல் என்ஜினீயர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது.
  • ரிஜக்டடு எந்திரங்கள் 7 தினங்களுக்குள் பெங்களூர் பெல் நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்

திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, சென்னை தலைமை தேர்தல்அலுவலர் - அரசு முதன்மை செயலர் கடிதத்துடன் வரப்பெற்ற கால அட்டவணையின் படி திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் 8 பெல் என்ஜினீயர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது.

முதல் நிலை சரிபார்ப்பு பணியின் ஒரு பகுதியாக மாதிரி வாக்குப்பதிவு 8.8.2023 மற்றும் 9.8.2023 ஆகிய இரு தினங்களில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

4.7.2023 அன்று திருப்பூர் மாவட்ட இருப்பு விபரம் 5698 பேலட் யூனிட் எந்திரங்களும், 3600 கண்ட்ரோல் யூனிட் எந்திரங்களும், 3876 விவிபேட் எந்திரங்களும் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி எப்எல்சி. ரிஜக்டடு எந்திரங்கள் 7 தினங்களுக்குள் பெங்களூர் பெல் நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News