உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாநகரில் இன்று விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு - போக்குவரத்து மாற்றம்

Published On 2022-09-03 10:11 GMT   |   Update On 2022-09-03 10:11 GMT
  • 5000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
  • அனைத்து சரக்கு வாகனங்களும் இரவு 10 மணி வரையில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூா் மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியையொட்டி 5000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகளுக்கு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இன்று மாலை விநாயகர் சிலைகள் விஜர்சன ஊா்வலம் நடக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ஊர்வலத்தில் விநாயகர் சிலைகள் அணிவகுத்து செல்கின்றன. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி திருப்பூர் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாநகரில் அனைத்து சரக்கு வாகனங்களும் இன்று இரவு 10 மணி வரையில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகா் விசா்ஜன ஊா்வலத்தின்போது கோவை டிபாா்ட்மென்ட் ஸ்டோா் அருகிலிருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை அவிநாசியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திருமுருகன்பூண்டியில் இருந்து பூலுவபட்டி வழியாக செல்ல வேண்டும்.

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பிற்பகல் 12 மணி முதல் 60 அடி சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டுவிட்டு கேவிபி. சந்திப்பு, புஷ்பா சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். அதேபோல, பெருமாநல்லூா் சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்துப் பேருந்துகளும் பூலுவபட்டி சந்திப்பில் திருப்பி விடப்பட்டு திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலை வழியாக அவிநாசி சாலையை அடைந்து வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சந்திப்பு வழியாக சென்று புஷ்பா சந்திப்பில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.

பெருமாநல்லூா் சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் பிற்பகல் 1 மணி முதல் பூலுவபட்டி நான்கு சாலையில் திருமுருகன்பூண்டி மற்றும் வாவிபாளையம் சாலையில் திருப்பி விடப்படும். அதேபோல, பொதுக்கூட்டம் நடைபெறும்போது நடராஜ் திரையரங்கம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மேலும், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் நடைபெறும்போது மில்லா் பேருந்து நிறுத்தம், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  

Tags:    

Similar News