உள்ளூர் செய்திகள்

புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி  திறந்து வைத்த காட்சி.

பெருமாநல்லூர் அருகே ரூ.11.50 லட்சத்தில் புதிய அங்கன்வாடியை விஜயகுமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

Published On 2023-07-03 04:29 GMT   |   Update On 2023-07-03 10:46 GMT
  • ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.
  • புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

பெருமாநல்லூர்:

திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.

விழாவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை செய்தும், புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

இதில் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள், ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, ஒன்றிய பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிச்சாமி, முன்னாள் சேர்மன் தங்கராஜ், கொண்டத்துக்காளியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யம் மகராஜ்,வார்டு உறுப்பினர்கள் யுவராஜ்,முருகேஷ், குமார், ராசப்பன் மற்றும் அங்கன்வாடி ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News