உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நலத்திட்ட உதவித்தொகையை குடியிருப்பிலேயே வழங்க வேண்டும் - மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

Published On 2023-04-27 05:27 GMT   |   Update On 2023-04-27 05:27 GMT
  • ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில்13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
  • பல கி.மீ., தூரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.

உடுமலை :

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, ஆட்டுமலை உட்பட 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.அரசின் முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், அங்கு வசிக்கும் மக்கள் பயனாளிகளாக பயன்பெற்று வருகின்றனர்.ஆனால் உதவித்தொகை பெறவும், ரேஷன் பொருட்களுக்காகவும், சமவெளிப்பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.உதாரணமாக தளிஞ்சி மலைவாழ் கிராம மக்கள், பல கி.மீ., தூரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.

சின்னாறு செக்போஸ்ட் வரை நடை பயணமாக வந்து அங்கிருந்து, பஸ்சில் மானுப்பட்டி, உடுமலை உட்பட பகுதிகளுக்கு அப்பகுதி மக்கள் வந்து சென்று வந்தனர்.உதவித்தொகை உட்பட நலத்திட்டங்களை நேரடியாக தங்களது கிராமத்துக்கே கொண்டு வந்து வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மலைவாழ் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News