உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மடத்துக்குளம் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-10-14 08:58 GMT   |   Update On 2022-10-14 08:58 GMT
  • மதுரை ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில், மடத்துக்குளம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
  • பெரும்பாலான ரெயில்கள் மடத்துக்குளம் நிலையத்தில் நிற்பதில்லை.

மடத்துக்குளம் :

திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதையில், மதுரை ெரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில், மடத்துக்குளம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அகல ெரயில்பாதை பணிகள் துவங்கும் முன், இந்த நிலையம் முழுமையாக இயங்கி வந்தது.அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று ெரயில் சேவை துவங்கிய பிறகு, இந்த ெரயில்பாதையில் இயக்கப்படும் பெரும்பாலான ெரயில்கள் மடத்துக்குளம் நிலையத்தில் நிற்பதில்லை.இதனால் அப்பகுதியை சேர்ந்த பயணிகள் உடுமலை அல்லது பழநிக்குச்சென்று ெரயில் ஏற வேண்டியுள்ளது.

இவ்வாறு பயன்பாடு இல்லாததால், மடத்துக்குளம் ரெயில் நிலையம் தற்போது பரிதாப நிலையில் உள்ளது.டிக்கெட் கவுன்டரை உள்ளடக்கிய கட்டடம் சிதிலமடைந்து மேற்கூரையில் செடிகள் முளைத்து வருகிறது.பயணிகள் காத்திருக்கும் பிளாட்பார்ம் பகுதி முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு பயணிகள் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.கழிப்பிடமும் நிரந்தரமாக பூட்டப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ரெயில் நிலையம் என்பதற்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு அவ்விடம் படுமோசமான நிலையில் உள்ளது.

மடத்துக்குளம் புதிதாக தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு, அரசு சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகம், கோர்ட்டு என தாலுகாவுக்குரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல் அமராவதி பாசனத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு விளைகிறது. திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியை சுற்றிலும் நூற்பாலைகள், காகித ஆலைகள், தீவன உற்பத்தி தொழிற்சாலைகள் என 25க்கும் அதிகமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையும் இப்பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இவ்வாறு, இயற்கை மற்றும் தொழில் வளம் மிக்க பகுதியில், ெரயில் சேவை கிடைக்காதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதையில் இயக்கப்படும் அனைத்து ெரயில்களையும், மடத்துக்குளத்தில் நிறுத்த வேண்டும். மேலும், டிக்கட் கவுன்டர், முன்பதிவு மையம் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

Tags:    

Similar News