உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலையில் பராமரிப்பின்றி கிடக்கும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி சீரமைக்கப்படுமா?

Published On 2023-04-20 10:14 GMT   |   Update On 2023-04-20 10:14 GMT
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் விடுதி கட்டப்பட்டு உள்ளது.
  • வளாகம் முழுவதும் பாலித்தீன் செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளது.

உடுமலை :

உடுமலை அரசு கலைக்கல்லூரி அருகே கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி கட்டப்பட்டு உள்ளது.அதில் தங்கி இருந்து ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால் அந்தக் கட்டிடம் மற்றும் அதன் வளாகம் முறையாக பராமரிப்பு செய்வதில்லை.இதனால் வளாகத்தை சுற்றி செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதுடன் கட்டிடத்திலும் அரசமரம், ஆலமரம் முளைத்து அதன் கட்டுமா னத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் விடுதி கட்டப்பட்டு உள்ளது.அதன் மூலமாக மாணவர்கள் பயன் அடைந்தும் வருகின்றனர். ஆனால் கட்டிடமும் வளாகமும் முறையாக பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் வளாகம் முழுவதும் பாலித்தீன் செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளது.இதன் காரணமாக அங்கு தங்கி உள்ள மாணவர்களுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படும் சூழல் உள்ளது. அத்துடன் கட்டிடத்தின் மேல் பகுதியில் அரசமரம் ஆலமரம் உள்ளிட்டவை முளைத்து அதன் கட்டுமானத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.

இதனால் நாளடைவில் கட்டிடம் பழுதடையும் சூழலும் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி கட்டிடத்தையும் அதன் வளாகத்தையும் முறையாக பராமரிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News