உள்ளூர் செய்திகள்
எழுத்து மிகப்பெரிய தவம் - எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு
- சொல்ல வந்தது ஒன்று, புரிந்துகொள்ளப்பட்டது வேறு என்றாகிவிடக்கூடாது.
- எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும், ஒருவனுக்கு எழுத்தாற்றல் வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
திருப்பூர் :
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது:-
எல்லோராலும் எழுதிவிட முடியாது. எழுத்து மிகப்பெரிய தவம். நாம் உணர்ந்தவற்றை தெளிவாகவும், பிழையின்றியும் சொல்ல வேண்டும். சொல்ல வந்தது ஒன்று, புரிந்துகொள்ளப்பட்டது வேறு என்றாகிவிடக்கூடாது.
ஒருநாள் பயிற்சி செய்தால் சைக்கிள் பழகிவிடலாம். ஒரு வாரம் முயற்சித்தால் மோட்டார் சைக்கிள் ஓட்டலாம். ஓராண்டு ஒரு துறையில் நிலைத்திருந்தால்அத்துறையில் வல்லுனராகலாம்.ஆனால் எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும், ஒருவனுக்கு எழுத்தாற்றல் வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எழுத்தாளரை கவுரவிப்பது என்பது, சமுதாய அக்கறையாளரை கவுரவிப்பதாகும்.இவ்வாறு அவர் பேசினார்.