வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் குண்டா் சட்டத்தில் கைது
- இமாம் அலி என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
- மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.
திருப்பூர் :
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஜமுனை வீதியில் கணேஷ் என்பவா் கடந்த ஜனவரி 23 ந் தேதி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது வழிமறித்த நபா் ஒருவா் அரிவாளைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த வெள்ளி, தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்து சென்றாா்.
இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடா்புடைய தாராபுரம் சாலை குருப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த இமாம் அலி (27) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்தநிலையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இமாம்அலியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இமாம்அலியிடம் திருப்பூா் தெற்கு காவல் துறையினா் நேரில் வழங்கினா்.