டி.என்.பி.எஸ்.சி. போட்டி தோ்வு பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது
- இலவசப் பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.
- பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தோ்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட உள்ள துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், துணை பதிவாளா் (கூட்டுறவுத் துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா் (வணிக வரித் துறை), மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் போன்ற பணியிடங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தோ்வு அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் தொடங்குகிறது. அதேபோல, குரூப் 2 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 25-ந்தேதி( வெள்ளிக்கிழமை )காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.
இந்த பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் தங்களது பெயரை 94990-55944, 0421-2999152 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள் இந்த பயிற்சி வகுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.