உள்ளூர் செய்திகள்
சித்திரை மாத பிரம்மோற்சவ தேரோட்டம்
- பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
- மூலவருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றின் தென் கரை மண்ட கொளத்தூரில் ஸ்ரீ தர்ம நவேஸ்வரர் கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா 7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கும் உற்சவமூர்த்திக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அலங்கரித்த உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாட்டினை விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.