அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
- அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு வந்தவாசி தொகுதி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 186 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அரங்காவலர் குழு உறுப்பினர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், பெரணமல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி ஏழுமலை, துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன், காங்கிரஸ் பொறுப்பாளர் பழக்கடை பாலையா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.