உள்ளூர் செய்திகள்

சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கலந்து கொண்ட போது எடுத்த படம்,

மாணவர்களை புத்தகம் படிக்க வைப்பது பெற்றோர் கடமை

Published On 2023-04-18 09:18 GMT   |   Update On 2023-04-18 09:18 GMT
  • மாவட்ட கல்வி அலுவலர் பேச்சு
  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, மாவட்டம் சி.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் நம்பெருமாள், தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சந்திரசேகர், கீழ்பெண்ணாத்தூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வேல்முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் ஆசிரியர் பயிற்றுனர் தமிழ்நேசன், வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நளினி, கலந்து கொண்டு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சிறு வயது முதலே நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து படிக்க நல்ல புத்தகங்கள் தான் மாணவர்களின் நல் வழிகாட்டி மேலும் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது, அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தொலைக்காட்சி பார்ப்பது நிறுத்த வேண்டும். ஆகியவற்றை நிறுத்தி மாணவர்களுக்கு நல்வழி காட்ட பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

படிப்பு தான் மாணவர்கள் எதிர்காலம் ஆகவே படிப்பில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஒரு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று பேசினார்.

Tags:    

Similar News