உள்ளூர் செய்திகள்

ஆரணி ஆஸ்பத்திரியில் காத்திருந்த நோயாளிகள்.

அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதி

Published On 2022-07-11 09:03 GMT   |   Update On 2022-07-11 09:03 GMT
  • 100-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி அலுவலகம் அருகில் ஆரணி அரசு மருத்துவமனை உள்ளது.

இதில் மருத்துவ அலுவலர் மமதா உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் ஆரணி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு காலை வரையில் மட்டும் தான் சிகிச்சை அளிப்பது வழக்கம் சிகிச்சை சம்மந்தமாக நோயாளிகளுக்கு வழங்ககூடிய சீட்டு வழங்கபட்டது.

நோயாளிகள் அவதி

ஆனால் காலையில் மருத்துவர் பணி நேரத்தில் நீண்ட நேரம் ஆகியும் தனது இருக்கையில் வராத காரணத்தினால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாயினார்கள்.

ஆரணி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்த நோயாளிகள் மருத்துவர் தனது இருக்கையில் இல்லாத காரணத்தினால் நீண்ட வரிசையில் கால் வலிக்க நீண்ட நேரம் நின்று கொண்டு காத்திருந்ததால் நோயாளிகள் மேலும் சோர்வடைந்து காணப்பட்டனர்.

ஓரு சில நோயாளிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து மருத்துவ அலுவலரிடம் நோயாளிகள் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

ஆனாலும் மருத்துவர் இருக்கைக்கு எந்த ஓரு மருத்துவரும் வரவில்லை.

இது குறித்து சம்மந்தபட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நோயாளிகளை அலைகழிக்காமல் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News