உள்ளூர் செய்திகள்

விழா குழுவினருக்கு எஸ்.பி. கார்த்திகேயன் அறிவுரைகள் வழங்கிய போது எடுத்த படம்.

செய்யாறில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் இடங்களில் எஸ்.பி. ஆய்வு

Published On 2022-09-02 09:45 GMT   |   Update On 2022-09-02 09:45 GMT
  • நாளை ஊர்வலம் நடக்கிறது
  • போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல அறிவுரை

செய்யாறு:

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செய்யாறு நகரில் இந்து முன்னணி சார்பிலும் மற்றும் விநாயகர் கோவில்களில் விழா குழுவினர் சார்பிலும் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை நாளை (சனிக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் சென்று கோனேரியான் குளக்கரையில் கரைக்கப்படுகிறது.

இதையொட்டி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் நேற்று இரவு 7 மணி அளவில் செய்யாறு நகரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லும் வழிப்பாதைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மார்க்கெட்டில் அம்மா உணவகத்தில் அருகே விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரிடம் விநாயகர் சிலையை அமைதியான வழியில் யாருக்கும் எந்தவித தொந்தரவும் அளிக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், போலீசார் அனுமதித்த வழித்தடத்திலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News