திருவண்ணாமலை கோவிலில் ரூ.1.60 கோடி உண்டியல் காணிக்கை
- 1.31 கிலோ வெள்ளி கிடைத்தது
- ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்ணப்படும்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கை யாக ரூ.1.60 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
இவ்வாறு பவுர்ணமிக்கு பிறகு, பெறப்படும் காணிக்கையை, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.1,60,13,349 ரொக்கம், கிராம் தங்கம், 1.316 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.