உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை
- அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ. 1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடத்தி பணி துவக்கி வைக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ. 1கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி அங்குள்ள லட்சுமி நகரில் ரூ.6லட்சத்து66 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிக்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடத்தி பணி துவக்கி வைக்கப்பட்டது.
இதில் ஒன்றிய குழு தலைவர்கள் தேன்மொழி( பல்லடம்), வக்கீல் குமார் (பொங்கலூர்), பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள் சோமசுந்தரம்,கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.