உள்ளூர் செய்திகள்

பஸ்கள்

நாளை பள்ளிகள் திறப்பு - இன்று கூடுதலாக 1450 பஸ்கள் இயக்கப்படுகிறது

Published On 2022-06-12 06:56 GMT   |   Update On 2022-06-12 06:56 GMT
  • தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன.
  • பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னை:

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறைகளின்போதும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

இதற்கிடையே, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று 1,450 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News