உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்

Published On 2023-07-11 09:23 GMT   |   Update On 2023-07-11 09:23 GMT
  • போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இவ்வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல் நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்வருகிற 15-ந் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள்14-ந் தேதி –க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில்அணுகி முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும்இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News