ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
ஈரோடு:
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் கடைகள், நுகர்வோர் வாணிப கழக கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதன்படி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி பெருந்துறையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் ரேஷன் அரிசி சரியான அளவில் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அவர் பார்வையிட்டார்.
மேலும் தண்ணீர்பந்தல், மயிலாடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டதையும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை எடை போட்டு அவர் சரிபார்த்தார்.
இந்த ஆய்வின்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.