உள்ளூர் செய்திகள்
நடைபாதையில் ஆதரவற்ற மூதாட்டியிடம் நலம் விசாரித்த மாநகராட்சி கமிஷனர்
- முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்கிறேன் விருப்பம் உள்ளதா என கேட்டறிந்தார்.
- கோவை டவுன் ஹாலில் ஆய்வின் போது பேசினார்
கோவை, ஜூன்.5-
கோவை மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றவர் பிரதாப். இவர் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன் ஹால் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது நடை பாதையில் இருந்த ஆதரவற்ற மூதாட்டியை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பார்த்தார். பின்னர் அவரிடம் சென்று நலம் விசாரித்தார். அவரிடம் முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்கிறேன் விருப்பம் உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் டவுன் ஹால் மற்றும் ராஜா வீதி ஆகிய பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த படுகிறதா என்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் மக்களிடம் முதல் -அமைச்சர் மீண்டும் மஞ்சப்பை திட்டம் அறிவித்து செயல்படுத்தி வருகி றார்கள். பொதுமக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.