வத்தல்மலை பகுதிக்கு மினி பஸ் இயக்கப்படுமா? -பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- தனியார் போக்குவரத்தும் தற்போது முடங்கி விட்டதாக கூறப்படுகிறது
- அரசு சார்பில் மினி பஸ் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்காக ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த பொது ரூ.16 கோடி செலவில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது.
பின்னர் அடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இந்த வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தனியார் பஸ்கள் இப்பகுதியில் இயங்கி வந்தன.
இதனால் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக இருந்தது.இப்பகுதி மக்கள் அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்றல் சுமார் 80 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனியார் போக்குவரத்தும் தற்போது முடங்கி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர். அரசு சார்பில் மினி பஸ் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.