நாகர்கோவிலில் இன்று பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில், அக். 27-
தி.மு.க. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொன்.ராதாகிருஷ்ணன்
குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர் பொன்ரத்தினமணி முன்னிலை வைத்தார்.
முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்து வருகிறது. 1967-ம் ஆண்டு தமிழை சொல்லி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். 50 ஆண்டு காலமாக தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சிக்கு என்று ஒரு இருக்கை அமைக்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் பிரதமர் மோடி காசி பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று 3 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது.
உலகத்திலேயே பழமை யான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி கூறினார். சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமை யான மொழி என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் இங்குள்ள தி.மு.க.விற்கு தமிழைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
துரோகம்
இலங்கையில் தமிழர்கள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கைகுலுக்கியவர்கள் தான் தி.மு.க.,-காங்கிரஸ் எம்.பி., க்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தமிழக மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். குமரி மாவட்டத்தில் எதை வேண்டுமானாலும் அரசியலாக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அது மோச மான விளைவுகளை ஏற்ப
டுத்தும்.
குமரி மேற்கு மாவட்ட த்தில் மாணவர் ஒருவர் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்த பள்ளியை மீண்டும் திறந்து செயல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மாண வர்கள் தொடர்ந்து அங்கு கல்வி கற்க வேண்டும்.
குரல் கொடுப்போம்
தமிழை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. அது எந்த அரசாக இருந்தாலும் சரி. வேறு மொழியை திணிக்கும் நிலை ஏற்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டது.