உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே இன்று தேனீக்கள் கொட்டியதில் 15 மாணவர்கள் மயக்கம்

Published On 2022-07-14 08:40 GMT   |   Update On 2022-07-14 08:40 GMT
  • விழுப்புரம் அருகே இன்று 15 மாணவர்கள் தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்தனர்.
  • சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்துவந்து மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்த்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே வடவாம் பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தை சுற்றிலும் ஏராளமான மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த மரங்களில் தற்போது தேனீக்கள் அதிக அளவில் கூடுகட்டி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இயற்கை உபாதைக்காக மரத்தடி யில் ஒதுங்குவது உண்டு. அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் மாணவர்கள் மரத்த டிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து படை யெடுத்து வந்த தேனீக்கள் மாண வர்களை கொட்டியது. இதனால் அவர்கள் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் 15 மாணவர்கள் தேனீக்கள் கொட்டியதில் மயங்கினர். சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்துவந்து மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலு வலர் காளிதாஸ் விரைந்து சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News