உள்ளூர் செய்திகள்

மாணவியை ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்று வாழ்த்திய போது எடுத்தபடம்.

காவலர் தேர்வில் பெண்கள் பிரிவில் முதலிடம்-சங்கரன்கோவில் மாணவிக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து

Published On 2023-05-31 07:04 GMT   |   Update On 2023-05-31 07:04 GMT
  • கலா மாநில அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
  • முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், கலாவை நேரில் அழைத்து பணி ஆணையை வழங்கினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் மகளான கலா (23).

காவலர் தேர்வு

கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அகாடமியில் படித்து கடந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தகுதிக்கான தேர்வில் பங்கேற்றார். எழுத்து, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் பங்கு பெற்ற கலா மாநில அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதனைதொடந்து கடந்த வாரம் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், கலாவை நேரில் அழைத்து தமிழக காவல்துறைத்தலைவர் சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் முன்னிலையில் காவலர் பணிக்கான பணி ஆணையை வழங்கினார்.

எம்.எல்.ஏ. வாழ்த்து

முதல்-அமைச்சரிடம், பணி ஆணை பெற்ற மாணவி கலாவை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரடியாக கரிவலம்வந்தநல்லூர் பயிற்சி நிலையத்திற்கு சென்று வாழ்த்தி பரிசு மற்றும் மரக்கன்று வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதில் அகாடமி ஜான்சன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், பஞ்சாயத்து தலைவர் தினேஷ் மற்றும் பெற்றோர்கள், அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News