உள்ளூர் செய்திகள்

குன்னூர் லேம்ஸ்ராக் காட்சிமுனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

Published On 2023-05-07 09:44 GMT   |   Update On 2023-05-07 09:44 GMT
  • லேம்ஸ்ராக் காட்சி முனையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
  • கழிப்பறை, நடைபாதை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

குன்னூர்

தற்போது சமவெளிப் பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீலகிரி மாவட்டத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

அழகிய பசுமை நிறைந்த காடுகளையும். சமவெளி பகுதிகளில் ஓடும் ஆறுகளையும் வானுயர்ந்த மலைகளையும் பார்க்கலாம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் குன்னூர் லாம்ஸ் ராக் காட்சி முனை பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்க இருக்கை அமைப்பது, கழிப்பறை, நடைபாதை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது சுற்றுலா துறை அலுவலர் உமா சங்கர், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பர்லியார் ஊராட்சி மன்ற தலைவி சுசீலா மற்றும் பலர் இருந்தனர்.

Tags:    

Similar News