உள்ளூர் செய்திகள் (District)

குளுகுளு சீசனை அனுபவிக்க ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்

Published On 2023-11-20 08:36 GMT   |   Update On 2023-11-20 08:36 GMT
  • பிரதான புல்தரை மைதானத்தில் குடும்பத்தினருடன் நடனமாடி மகிழ்கின்றனர்
  • ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரே நாளில், 18 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதாரமே சுற்றுலாதான். இதனை நம்பி அங்கு லட்சக்கணக்கானோர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா வணிகம் களைகட்டி வருகின்றது.

ஊட்டியில் ஆண்டுக்கு இரண்டு சீசன் என்பது போய் தற்போது வாரஇறுதி. நாட்கள் எல்லாம் சீசன் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

அந்தளவுக்கு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

அதிலும் குறிப்பாக கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்திருந்து அங்கு நிலவும் குளுகுளு சீசனை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

பின்னர் அவர்கள் அங்குள்ள பிரதான புல்தரை மைதானத்தில் குடும்பத்தினருடன் நடனமாடி மகிழ்கின்றனர்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் விடுமுறை நாளான சனிக்கிழமை ஒரே நாளில், 18 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மேலும் ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சிமுனை, ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்களிலும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகளை பார்க்க முடிந்தது.

நீலகிரி மாவட்டத்துக்கு நவம்பர் மாத குளிரிலும் சுற்றுலாபயணிகள் படை யெடுத்து வருவதால், அங்கு உள்ள வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News