உள்ளூர் செய்திகள்

குன்னூரில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-07-30 08:42 GMT   |   Update On 2023-07-30 08:42 GMT
  • கேத்தி பகுதியில் பெரிய மரம் வேருடன் பெயா்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம், ஊட்டி குன்னூா், கூடலூா், கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊட்டி-குன்னூா் ெரயில் பாதையில் கேத்தி பகுதியில் பெரிய மரம் வேருடன் பெயா்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் ெரயில்வே துறையினா் விரைந்து வந்த மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது.

இப்பகுதியில் அபாய நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குன்னூர் அடுத்துள்ள ஏலநள்ளி கிராமத்துக்கு செல்லக்கூடிய சாலையில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக குன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அவர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுமையான சூறாவளி காற்றும் சாரல் மழையும் பெய்து வருவதால் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News