சாலையில் நிறுத்தப்படும் லாரிகளால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி
- தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சரக்குகளை தேக்கி வைக்கும் குடோன்கள் மற்றும் லாரி செட்டுகள் இயங்கி வருகிறது.
- 500-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை ரவுண்டானா முதல் முத்தை யாபுரம் வரை குடியிருப்பு பகுதியில் ஏராளமான சரக்குகளை தேக்கி வைக்கும் குடோன்கள் மற்றும் லாரி செட்டுகள் இயங்கி வருகிறது.
போக்குவரத்து நெருக்கடி
இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படக் கூடிய திருச்செந்தூர் சாலையில் பள்ளி-கல்லூரி,தொழில் நிறுவனங்கள்,வணிக வளாகங்கள், பல ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கக்கூடிய பகுதியில் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
மேலும் மாதம் தோறும் குடோன்களில் சரக்குகளை இறக்க மற்றும் ஏற்றி செல்ல வரும் 500-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகவும், குறுக்கும் நெடுக்கமாகவும் நிறுத்தி வைக்கப்படுகிறது,இதன் காரணமாக மிகக் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவசரமாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஒட்டிகள் மற்றும் வாகனங்கள் விபத்து களில் சிக்கி வருகின்றனர்.
புகை மண்டலம்
மேலும் நெருக்கடி மிகுந்த சாலைகளில் டாரஸ் லாரிகள் மிக அதிவேகத்தில் செல்வதால் சாலையில் குவிந்து கிடக்கும் மணல்கள் தூசி புகை மண்டலமாக மாறி வருகிறது.
இதனால் நுரையீரல் சுவாச பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட மாநகர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.