உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி

Published On 2022-06-06 10:33 GMT   |   Update On 2022-06-06 10:33 GMT
  • உடலில் மண்எண்ணை ஊற்றியவரை போலீசார் தடுத்தனர்
  • அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை:

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தீர்ப்பு கூட்டம் இன்று வழக்கம்போல நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மாற்றுதிறனாளி முகமது சாதிக் பாஷா என்பவர் வந்தார்.

அப்போது அவர் திடீெரன தன் மீது மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து முகமது சாதிக் பாஷா கூறியதாவது:-

நான் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக அலுவலகம் அமைத்து வீட்டு மனைகளை விற்று வருகிேறன். இந்நிலையில் டாஸ்மாக் பார் அமைப்பதற்காக எனது அலுவலகத்தை காலி செய்யக்கோரி சில நபர்கள் கட்டாயபடுத்தி வந்தனர்.

இதனால் நான் சற்று கால அவகாசம் கேட்டேன், ஆனால் கடந்த ஏப்ரல் 10-ந் தேதி எனது அலுவலகத்தில் புகுந்த மர்மநபர்கள் எனது அலுவலகத்தை அடித்து உடைத்து அங்கிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றனர்.இது இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் புகார் அளித்தேன்.

அங்கேயும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார்.மண்எண்ணை யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News