உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
- திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் 75- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் துணிபைகள் வழங்கப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் 75- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் தலைமை தாங்கினார். இதில் அசிஸ்டன்ட் டிவிஷனல் என்ஜினீயர் நாராயணன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் மதிவாணன், முன்னாள் ராணுவ வீரர் சங்கத் தலைவர் விசுவாசம், நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் சரண், கமர்சியல் இன்ஸ்பெக்டர் வீரபெருமாள்,ரெயில்வே நிலைய அலுவலர் கோவிந்தராஜ், சீனியர் செக்சன் என்ஜினீயர் செந்தில்,சுகாதார ஆய்வாளர் சுரேஷ், சமூக ஆர்வலர் பால் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் துணிபைகள் வழங்கப்பட்டது.