சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
- நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- மகிழம், வேம்பு, புனியன், நாவல், சாக்குகொன்றை ஆகிய மர வகைகள் நடப்பட்டு வருகின்றன.
சங்கரன்கோவில்:
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி சென்னையில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது போல கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதில் மகிழம், வேம்பு, புனியன், நாவல், சாக்குகொன்றை ஆகிய மர வகைகள் நடப்பட்டு வருகின்றன.
முதல்-அமைச்சரின் இந்த உத்தரவினை தொடர்ந்து சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெல்லை சாலையில் மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க .செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை பணி யாளர்களிடம் மரக்கன்றுகளை பத்திரமாக பாதுகாத்து அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
இதில் தி.மு.க.வைச் சேர்ந்த வீரமணி, வீராசாமி, ஜெயக்கு மார் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.