உள்ளூர் செய்திகள்

பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற 3 வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-08-11 06:39 GMT   |   Update On 2023-08-11 06:39 GMT
  • மணப்பாறையில் உரிய ஆவணங்கள் இன்றி பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற 3 வாகனங்கள் பறிமுதல்
  • ரூ.54 ஆயிரம் அபராதம் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி

மணப்பாறை

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகா பகுதிகளில் பள்ளிக்குழந்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு சரியான உள்ளதா? வாகனங்களுக்கு அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா? என்பதை மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியா அவ்வபோது ஆய்வு செய்து உரிய ஆவணங்கள் இன்றி அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் மற்றும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதே போல் நேற்று மணப்பாறை மதுரை சாலை மற்றும் கோவில்பட்டி சாலைகளில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த 3 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். அதில் இரண்டு வாகனங்களில் காப்பீடு மற்றும் எப்சி இல்லாமல் இருப்பது ஒரு வாகனத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் ஓட்டுனர் உரிமம் கூட இல்லாமல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 வாகனங்களையும் பறிமுதல் செய்து 54 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதுபோன்று விதிகளை மீறியும், உரிய ஆவணங்கள் இன்றியும் மோட்டார் வாகன விதிகளை மீறி பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News