உள்ளூர் செய்திகள்
- குடும்பத்தினருடன் மணப்பாறை சென்ற போது திடீரென மாயமானார்
- காதலனுடன் சென்றிருக்கலாம் என சந்தேகம்
திருச்சி,
திருச்சி தென்னூர் ரெஜிமெண்ட் பஜார் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(வயது 61). இவரின் மகள் ஜமீம்பானு(வயது 21). அப்துல் ரகுமான் தனது குடும்பத்துடன் மணப்பாறை சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற ஜமீம் பானு அதன் பின் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் காதலனுடன் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.