போலீசாருக்கு விருப்பம் போல்விடுமுறை
- திருச்சி போலீசார் விருப்பம்போல் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என கமிஷனர் தெரிவித்துள்ளார்
- போலீசாருக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேட்டி
திருச்சி,
திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் துறை சமுதாய கூடத்தில் காவல்துறை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம்அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடந்தது. முகாமை மாநகர காவல்துறை கமிஷனர் சத்யபிரியா தொடங்கி வைத்தார்.
இந்த பரிசோதனை முகாமில் டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ, இசிஜி அடிப்படை பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன், டாக்டர் சிவம், மார்க்கெட்டிங் மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன், ஜி.எம்.ஆப்ரேஷன் சங்கீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த காவல் துறை ஆணையர் சத்யபிரியா:- காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மன உளைச்சலை குறைப்பதற்காக வாரம் ஒரு முறை யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதலில் அவர்கள் உடல் நலம் முக்கியம். ஆகையால் முதல் கட்டமாக இலவச மருத்துவ பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது. காவலருக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என வரும் தகவல் பொய்யானது என்றார்.