உள்ளூர் செய்திகள்

ரூ. 1.50 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை

Published On 2022-09-13 09:23 GMT   |   Update On 2022-09-13 09:23 GMT
  • ரூ. 1.50 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது
  • காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்

திருச்சி:

தா.பேட்டை அருகே அஞ்சலம் கிராமத்திலிருந்து கோணப்பம்பட்டி செல்லும் வழியில் காட்டுவாய்க்கால் அமைந்துள்ளது. மழை, வெள்ள காலங்களில் இந்த வாய்க்கால் வழியாக காட்டாற்று வெள்ளம் செல்வது வழக்கம். காட்டாற்று வெள்ளம் அதிகமாக செல்லும் போது தரைமட்ட பாலத்தை அப்பகுதி பொதுமக்கள் கடந்து செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே உயர் மட்ட பாலம் ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் முசிறி தொகுதி எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜனிடம் கோரிக்கை விடுதிருந்தனர். பொதுமக்களின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ கொண்டு சென்றார். இதையடுத்து தமிழக அரசு ரூ 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து அஞ்சலம் முதல் கோணப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஆற்றின் குறுக்கே பூமிபூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கே.கே.ஆர்.சேகரன், கே.பெரியசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்ட துணை செயலாளர் எம்.மயில்வாகனன், நிர்வாகி பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். அப்போது எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் கூறும் போது, ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலத்தை நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலமாக மாற்றுவதற்கு பணிகள் தொடங்கியுள்ளது. பொது மக்களின் நலன் கருதி அரசு இந்த நிதியை ஒதுக்கி உள்ளது என்று கூறினார்.

விழாவில் நிர்வாகிகள் கோவிந்தசாமி, சிட்டிலரை சிவா, ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ், நெடுஞ்சாலை முசிறி உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சுரேஷ், மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் சௌந்தர்ராஜன், நகர செயலாளர் தர்மராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News