உள்ளூர் செய்திகள்

திருச்சியில் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் மாநில பொதுக்குழு கூட்டம்

Published On 2022-09-30 09:35 GMT   |   Update On 2022-09-30 09:35 GMT
  • திருச்சியில் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் மாநில பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது,
  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அரசு சுகாதாரத் துறையைப் போன்று சேவை மனப்பான்மையுடன் லாப, நஷ்டம் பாராது மக்களின் நலன், மேம்பாடு என்ற வகையில் செயல்பட்டு வரும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

திருச்சி,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. மாநிலததலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் கலியமூர்த்தி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாநில இணைச்செயலாளர் செளந்தர்ராஜ், மாநில பொதுச்செயலாளர் ராசகுமார், பொருளாளர் ஜோதி வீரபாண்டியன், மாநில துணைத்தலைவர் ஸ்ரீதரன், இணைச்செயலாளர்கள் நடராஜன், அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் கேத்தரின் ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அரசு சுகாதாரத் துறையைப் போன்று சேவை மனப்பான்மையுடன் லாப, நஷ்டம் பாராது மக்களின் நலன், மேம்பாடு என்ற வகையில் செயல்பட்டு வரும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த வாரியத்தை வர்த்தக ரீதியான நிறுவனமாக பாராது குடிநீர் வழங்கல் துறையாகக் கருதி அரசின் சலுகைகள் வழங்கப்பட வேண்டுகிறோம்.

அவ்வாறு கருதாத பட்சத்தில், மின்சார வாரியத்திற்கு வழங்குதலைப் போன்று குறைந்த பட்சம் ரூ.5000 கோடியையாவது மானியமாக வழங்க வேண்டுகிறோம். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் குடிநீருக்கு உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர்க் கட்டணத்தை சரிவர செலுத்தாத காரணத்தால் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது. வாரியச் சட்டபடி திட்டத்திற்கான செலவினத் தொகையை அமைப்புகள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலவினத் தொகையை செலுத்தாத நிலையில் அரசே அத்தொகையைச் செலுத்தி விட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். இத்தகைய வாரிய சட்டம் குடிநீர்க் கட்டணம் வசூலிக்க செலுத்தாத உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும்.

எனவே, இவ்வாரியச் சட்டத்தை உரிய வகையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசையும், வாரியத்தையும் கேட்டுக்கொள்கிறோம். அரசு வெளியிடும் பணியாளர், ஓய்வூதியர் சம்பந்தமான அனைத்து அரசு ஆணைகளையும் காலதாமதமின்றி உடனே வாரியத்தில் நடைமுறைப்படுத்தபட வேண்டும். மேற்கண்டவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் மாநில துணைத்தலைவர் எஸ்.பி.கருணாகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News