உள்ளூர் செய்திகள் (District)

சீதோஷ்ண நிலை மாற்றத்தால்தவிக்கும் திருச்சி வாழ் மக்கள்

Published On 2023-02-04 08:22 GMT   |   Update On 2023-02-04 08:22 GMT
  • பகலில் மழை மேகமூட்டம்-இரவில் கடும் குளிர்
  • தவிக்கும் திருச்சி வாழ் மக்கள் மாவட்டம் முழுவதும் 184 மி.மீ. பதிவானது

திருச்சி, 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் அதி–காலை முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகி–றது. நேற்று 2-வது நாளாக பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கரில் அறுவ–டைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பலத்த சேத–மடைந்தன.மூன்றாவது நாளாக இன் றும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது. தமிழகத் தில் மழையானது படிப்ப–டியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனாலும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள் ளது. மேலும் சாலை பணி–களுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு சேறும், சகதியுமாக இருப் பதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அதேபோல் இரவு நேரங் களில் கடுமையான பனிப் பொழிவு காணப்படுகி–றது. நேற்று காலை முதல் மாலை வரை மேகமூட்டமாக காணப்பட்டது. கனமழை பெய்யக்கூடும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்தது.நேற்று மாவட்டம் முழு–வதும் 184.5 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதில் அதிக–பட்சமாக முசிறி பகு–தியில் 24 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்ட–ரில் வருமாறு:-கள்ளக்குடி-5.2, லால் குடி-3, நந்தியாறு அணைக் கட்டு-6.2, புள்ளம்பாடி-5.2, தேவிமங்கலம்-6.4, சமய–புரம்-6, சிறுகுடி-9.2, வாத் தலை அணைக்கட்டு-8, மணப்பாறை-6, பொன்ன–ணியாறு அணை-7, கோவில்பட்டி-9.4, மருங்கா–புரி-12.4, புலிவலம்-10, தா.பேட்டை-2, நவலூர் குட்டப்பட்டு-6.2, துவாக் குடி-8.3, கொப்பம்பட்டி-4, தென்பரநாடு-13, துறையூர்-4, பொன்மலை-8, திருச்சி விமான நிலையம்-7, திருச்சி ஜங்ஷன்-8, திருச்சி டவுன்-6.பெயரளவுக்கு மட்டுமே மழை பெய்திருந்தாலும் கடும் குளிர் காற்று வீசும் காரணத்தினால் மாநகரில் வயதானவர்கள் தங்கள் வீடுகளில் முடங்கி கிடக்கி–றார்கள். சீதோஷ்ண நிலை மாற்றம் குழந்தைகளுக்கு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் கொதிக்க வைத்த நீரை பருகவேண்டும் என்று டாக்டர்கள் கேட் டுக்கொண்டு உள்ளனர்.கடலோர பகுதி–களை உள்ளடக்கிய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News