உள்ளூர் செய்திகள்

காவிரி பாலம் திறப்பு

Published On 2023-03-04 10:05 GMT   |   Update On 2023-03-04 10:13 GMT
  • அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
  • பக்கவாட்டு சுவர்களில் திருக்குறள் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது

திருச்சி,

திருச்சியையும், ஸ்ரீரங்கத் தையும் இணைக்கும் வகை–யில் காவிரி ஆற்றில் கடந்த 1976-ம் காவிரி பாலம் கட்டப்பட்டது. 541.46 மீட்டர் நீளமும், 19.20 மீட்டர் அகல–மும், 16 கண்கள் கொண்ட–தாகவும் பாலம் கட்டப்பட் டது.சுமார் 46 ஆண்டு காலம் இந்த பாலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் பாலத்தில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம். இதற்கிடையே பாலத்தின் 32 தட்டுகளின் இணைப்பு பகுதி மற்றும் இந்த பாலம் கட்டப்படும் போது வைக் கப்பட்ட 192 அதிர்வு தாங் கிகளின் ஆயுட்காலம் முடி–வடைந்து விட்டதாலும், பாலத்தின் ஓடுதளத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த–தாலும் அதன் விரியும் தன்மை குறைந்து விட்டது. இதனால் பாலத்தில் பள் ளங்கள் ஏற்பட்டு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.எனவே பாலத்தை புனர–மைக்கும் பணிகளுக்காக கடந்த செப்டம்பர் 10-ந் தேதி மூடப்பட்டு போக்கு–வ–ரத்தில் மாற்றம் செய்யப் பட்டது. மேலும் ரூ.6.84 கோடி ஒதுக்கப்பட்டு பேரிங் கு–கள் மாற்றுதல், இரு கண்களுக்கு இடையேயான இணைப்புகளை சீரமைத் தல், புதிய தார்ச்சாலை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந் தது.இதற்கிடையே பாலத்தில் பேரிங்குகள் மாற்றப்பட்டு, இணைப்பு பகுதிகளும் புதிததாக அமைக்கப்பட்டு, புதிய தார்ச்சாலை அமைக் கப்பட்டது. மேலும் நடை–பாலம் சீரமைத்தல், கைப்பிடி சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்து முடிந்தது. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் திருக்குறள் எழு–தப்பட்டுள்ளது.அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலை–யில் இன்று அந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட் டுக்கு திறந்து விடப் பட்டது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அதிகாலையில் காவிரி பாலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வாகன போக்குவரத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Tags:    

Similar News