உள்ளூர் செய்திகள் (District)

தேர் தூக்கும் உரிமை தர கோரி கலெக்டரிடம் மனு

Published On 2023-03-27 08:55 GMT   |   Update On 2023-03-27 08:55 GMT
  • அனுமதி மறுப்பதாக புகார்
  • 18 கிராம மக்கள் உண்ணாவிரதம்

திருச்சி, 

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஸ்ரீ மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவில் தேர் தூக்கும் உரிமையை அதன் சுற்றுவட்டார பகுதியான எம் புத்தூர், சத்திரம், மேலக்கரை காடு, இலந்தை மடை புதூர், தொட்டியபட்டி, நத்தம் காடுவெட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஒரு சமூகத்தினர் பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்னொரு சமூகத்திற்கு அந்த தேர் தூக்கும் உரிமையை ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.இதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் கடந்த 24ம் தேதி அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மேலும் தொடர்ச்சியாக இன்று அரை நிர்வாண கோலத்தில் மதுரை காளியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீநிவாசநல்லூர், மணமேடு, முசிறி, குளித்தலை, பெட்டவாய்த்தலை, பெருகமணி, சத்திரப்படியாக திருச்சி கலெக்டரை சந்தித்து மனு அளிக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. அதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் வக்கீல் கார்த்திக் தலைமையில் கலெக்டரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Tags:    

Similar News